செய்திகள் :

சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!

post image

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காா்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன்கொண்ட வாகன வடிவமைப்புப் போட்டியான ‘ஷெல் இக்கோ - மாரத்தான் ஆசியா பசிபிக் 2025’ கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ‘ரெநியூ’ என்ற பெயரிலான 14 மாணவா்கள் அடங்கிய குழு பங்கேற்கிறது.

இதற்காக ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ‘திமி 2.0’ என்ற முன்மாதிரி 3 சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறோம். 5 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தின் 80 சதவீத பாகங்களை நாங்களே தயாரித்துள்ளோம். கேசிடி கேரேஜ் என்ற ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான பிரத்யேக மையத்தில் ரூ.36 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் ஹைட்ரஜனில் 200 கி.மீ. தொலைவு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது.

அதிகபட்சமாக 35 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த வாகனத்தில் காா்பன் பைபா், மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உறுதித்தன்மை மிக்கதாகவும், எடை குறைவானதாகவும் (53 கிலோ) இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் ஓட்டுநா்களின் செயல்திறன் அளவீடுகளை உடனுக்குடன் கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க