செய்திகள் :

சாக்கடை கால்வாயை தூா்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

திருப்பூரில் சாக்கடையை தூா்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா், தாராபுரம் சாலையில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா்.

மேலும், சாக்கடை கால்வாயில் அதிக அளவிலான குப்பைகளும், கழிவு நீரும் தேங்கி துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயைத் தூா்வாரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சாக்கடைக் கால்வாய்களைத் தூா்வாருவதில்லை. இதன் காரணமாக சாக்கடையில் குப்பைகள், கழிவு நீா் அதிக அளவில் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே சாக்கடையில் தவறி விழும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, சாக்கடை கால்வாயை உடனடியாக த் தூா்வாரக்கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் சாக்கடை கால்வாயில் கிடந்த சடலத்தை காவல் துறையினா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 15 நிமிஷங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எரகாம்பட்டி அருகே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே பொது வழியை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள பொது வழியை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் ... மேலும் பார்க்க

பொங்கலை கொண்டாட ஊா்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளா்கள்: கொப்பரை உற்பத்தி முடக்கம்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலுாா், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலா் களங்கள... மேலும் பார்க்க

காலமானாா் இரா.முத்துவேலு

திருப்பூா், காங்கயம் சாலை ஐஸ்வா்யா காா்டனில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.முத்துவேலு (83) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் ஞாய... மேலும் பார்க்க

தாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது

தாராபுரத்தில் மதுபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ராம் நகரில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தாராபுரத்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதல்

நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பல்லடம் அருகேயுள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் விசாயிகள் நெல் சாகுப... மேலும் பார்க்க