Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்த...
`சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை' - அறிக்கை வெளியிட்ட சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்திவரும் சாட்டை என்ற யூடியூப் சேனலுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை தனது சொந்த எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாட்டை துரைமுருகன்.
அந்த அறிக்கையில், "திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்." என அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு ஏற்கெனவே தனிப்பட்டு இயங்கிவரும் சாட்டை சேனல் பற்றிய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாட்டை யூடியூப் சேனலில் சினிமா, சமூகம், குற்றங்கள் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துக்களை பேசி வருகிறார் துரை முருகன்.
அவர் பேசும் கருத்துகள் கட்சிக்குள் இருக்கும் சிலருக்கு ஏற்றுகொள்ள முடியதாதகாக இருப்பதனால், பெயரளவுக்கு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிக்கை. சாட்டை துரைமுருகன் கட்சி தலைமையுடன் நெருக்கமான உறவை தொடர்கிறார் எனக் கூறப்படுகிறது.