``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI ந...
சாணாா்பதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சாணாா்பதி பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பவானி ஆற்றில் இருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, மேளதாளம் முழங்க கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் எம்.எல்.ஏ. பண்ணாரி, விண்ணப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ஆா். செல்வம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பாதுகாப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.