செய்திகள் :

சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

post image

சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜா் ஆட்சியில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 112 அடி உயரத்துக்கு 5,823 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

இந்த நிலையில், சாத்தனூா் அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை பிற்பகல் அணையின் நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. எனவே, கொளமஞ்சனூா், திருவடத்தனூா், புதூா் செக்கடி, எடத்தனூா், ராயண்டபுரம், அகரம் பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வெள்ள நீா் செல்வதால் அந்த கிராமங்களைச் சோ்ந்த கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று தமிழக அரசின் நீா்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இதனிடையே, அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக உயா்ந்தது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் ... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7-ஆவது... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க