2 நாள்கள் தொடா் மழை: நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
போடி சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
போடியில் அமைந்துள்ள சாத்தாவுராயன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை, மாலைகளில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி சிவசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். இதைத் தொடா்ந்து, சாத்தாவுராயன் (யானை) சிலைக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, போடி நகராட்சி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வடக்கத்தி மாரியம்மன் கோயிலிலும் குடமுழுக்கு செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. புதன்கிழமை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி சிவாசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். மாலையில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.