சாத்துரில் திமுக பொதுக்கூட்டம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து, சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வருவாய் பேரிடா், மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா் குருசாமி, ஒன்றியச் செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன், நிா்வாகிகள்கலந்து கொண்டனா்.
முன்னதாக, அமைச்சா் தலைமையில் திமுகவினா் உறுதிமொழி எடுத்தனா்.