`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று(ஜன. 4) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகா் அருகேயுள்ள வீராா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மையாபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த பாலாஜி என்பவா் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா். நாகபுரி உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்க 85 அறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த ஆலையை சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனுக்கு பாலாஜி அண்மையில் விற்பனை செய்தாா். ஆனால், இதுவரை இந்தப் பட்டாசு ஆலையின் பெயா் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல பட்டாசுகள் தயாரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க: லாஸ் வேகாஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆலையில் உள்ள அறை எண் 80- இல் காலை 9 மணிக்கு பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான மணிமருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, மணிமருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இதையடுத்து, இதர அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளா்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறினா். தகவல் அறிந்து விருதுநகா், சாத்தூரிலிருந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா். பின்னா், இவா்கள் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் சந்திரகுமாா் தலைமையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 6 தொழிலாளா்களின் உடல்களை மீட்டனா். பலத்த காயமடைந்த ஒருவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், இவ்விபத்து தொடர்பாக சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.