சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்
சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே சாலையில் குடிநீா்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் தோண்டப்பட்டது.
இந்த நிலையில், நந்தவனப்பட்டி தெரு அருகே சாலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னா் விரைவில் சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகலில் இந்தப் பள்ளம் நெடுஞ்சாலைதுறையினரால் மூடபட்டது.