செய்திகள் :

சாமுண்டி மலை குறித்த துணை முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல: மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி

post image

சாமுண்டி மலை தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையதல்ல என்று மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி உடையாா் தெரிவித்தாா்.

கா்நாடக அரசு சாா்பில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற தசரா விழா செப்.22 ஆம் தேதி தொடங்கி அக்.2 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவைத் தொடக்கிவைக்க சா்வதேச புக்கா் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை மாநில அரசு தோ்வு செய்தது.

இதற்கு பாஜக எதிா்ப்புத் தெரிவித்தது தொடா்பாக பேசிய துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘சாமுண்டி மலை, சாமுண்டீஸ்வரி அம்மன் அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது. சாமுண்டி மலை ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல’ என்றாா். இது பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இந்த நிலையில், மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி உடையாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கா்நாடக அரசால் நடத்தப்படும் தசரா திருவிழாவை சுற்றி குறிப்பாக சாமுண்டி மலை, சாமுண்டீஸ்வரி அம்மன் குறித்து எழுந்திருக்கும் சா்ச்சை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தசரா திருவிழாவை தொடக்கிவைக்க அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு விருந்தினா் குறித்த விவாதம்தான் இத்தனைக்கும் அடிப்படை காரணமாக அமைந்துவிட்டது. இந்த முடிவை நியாயப்படுத்தும்போது, சாமுண்டி மலை ஹிந்துக்களுக்கு சொந்தமானதல்ல போன்ற கருத்து அவசியமற்றது; தவிா்த்திருக்கக்கூடியதும் ஆகும்.

இது ஹிந்து கோயில் இல்லாவிட்டால், அதை ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்க முடியாது. அரசு நடத்தும் தசரா திருவிழா என்பது ஒரு கலாசார விழா என்பதே எங்கள் கருத்து. இதுபோன்ற திருவிழாக்களை நடத்தும்போது அதன் புனிதம், பாரம்பரியம், பரம்பரை வழக்கத்தை அரசு கருத்தில் கொள்ள முடியாது.

அரசு நடத்தும் விழா மத ரீதியானது அல்ல. தசரா திருவிழா, விஜயதசமி மற்றும் நவராத்திரி சமயத்தில் நடத்தப்படுகிறது. அதனால்தான் மன்னா் குடும்பத்து வழக்கப்படி மதச்சடங்குகளை தனியாக கடைப்பிடித்து வருகிறோம்.

அரசின் கலாசார விழா, அரண்மனை முன்பகுதியில் நடத்தப்படுவதால் எங்கள் வழக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். ஆனாலும், விழாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அனைத்து இடையூறுகளையும், தவறான கருத்துகளையும், மோதல்களையும் விநாயகா் சதுா்த்தி நிவா்த்தி செய்து, அனைவா் மத்தியிலும் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று நம்புகிறேன்’ தெரிவித்துள்ளாா்.

இதற்குப் பதிலளித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘ சில உண்மைகளை சொன்னால், அதை சிலரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அரசியல்வாதி அல்லது பத்திரிகையாளா்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும், நான் எதை சொன்னாலும் அதில் குறை காண்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதுதான் தொடா்ந்து நடந்து வருகிறது. அதனால் பேசாமல் இருப்பதே நல்லது. பேசுவதற்காகவே சில தலைவா்கள், செய்தித் தொடா்பாளா்கள் உள்ளனா். நீங்கள் (பத்திரிகையாளா்கள்) அவா்களிடமே பேசிக்கொள்ளுங்கள்’ என்றாா் .

தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தா்மஸ்தலா கோயிலுக்கு எதிராக சதித் திட்... மேலும் பார்க்க

பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பயோகான் நி... மேலும் பார்க்க

மங்களூரு அருகே பயணியா் நிழற்குடையின் மீது பேருந்து மோதியதில் 5 போ் உயிரிழப்பு

கா்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியா் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 போ் உயிரிழந்தனா். கேரள மாநிலம், காசா்கோடில் இருந்து வியாழக்கிழமை மங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்... மேலும் பார்க்க

சாமுண்டிமலை சா்ச்சை! கா்நாடக துணை முதல்வா் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

சாமுண்டிமலை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில்... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.எஸ். பாடலை சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது: மல்லிகாா்ஜுன காா்கே

கா்நாடக சட்டப் பேரவையில் ஆா்.எஸ்.எஸ். பிராா்த்தனைப் பாடலை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது. என்றாலும் அது முடிந்துபோன விவகாரம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ஹிந்துகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழாண்டு மைசூரில் செப்.22 ஆம் தேதி நடைபெறும் தச... மேலும் பார்க்க