மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா
மங்களூரு அருகே பயணியா் நிழற்குடையின் மீது பேருந்து மோதியதில் 5 போ் உயிரிழப்பு
கா்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியா் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 போ் உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், காசா்கோடில் இருந்து வியாழக்கிழமை மங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்துவிட்டதால், தலப்பாடியில் உள்ள பயணியா் நிழற்குடை மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஒரு குழந்தை என மொத்தம் 5 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 7 போ் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், பிரேக் செயலிழப்பு குறித்து கா்நாடக சாலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.