சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திமுக நலஉதவி
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பேரூா் திமுக செயலா் முத்து, பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், பள்ளி மாணவா்களுக்கு இருக்கை உபகரணங்கள் வாங்குவதற்து தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நிதியை பள்ளி தலைமை ஆசிரியா் பிரபாவதியிடம் வழங்கினாா்.
இதில், பேரூராட்சி உறுப்பினா் சுடலைமுத்து, திமுக முன்னாள் நகரச் செயலா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் முத்துக்குமாா், ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.