வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கும்? அச்சுறுத்தும் முன்கணிப்பு!
குளுகுளு என்று இருந்த குளிர்காலம் முடிந்து, சுடச்சுட கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
குளிர்காலத்தில் என்னா பனி என்று புலம்பிய மக்கள், இனி அதை நிறுத்திவிட்டு, வியர்வை மழையில் நனைய வேண்டிய நாள்கள் வந்துவிட்டன. வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கியிருக்கிறது.
மிகவும் சரி... வானிலை ஆய்வு மையம் என்ன கோடை வெப்பம் வாட்டாது என்று சொல்லியிருக்கவா போகிறது. நிச்சயம் இல்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது போல, வரும் கோடைக்காலத்தில் வெப்பமானது இயல்பான அளவை விட அதிகமாகவே இருக்கும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.