செய்திகள் :

சாம்பியன்ஸ் லீக்: வரலாற்றுச் சாதனையுடன் முதல்முறையாக கோப்பை வென்றது பிஎஸ்ஜி!

post image

பிஎஸ்ஜி - இன்டர் மிலன் மோதிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 5-0 என பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதி, இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் இன்று மோதின.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் ஹகிமி 12ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடிக்க, 19 வயதான டூவே 20,63ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

தொடக்கம் முதலே பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய இன்டர் மிலன் அணி 40 சதவிகிதத்துடன் மிகவும் மோசமாக விளையாடியது.

60 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்த பிஎஸ்ஜி அணி 87 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.

பிஎஸ்ஜி அணி 23 ஷாட்டுகள் அடித்ததில் இலக்கை நோக்கி 8 ஷாட்டுகள் இருந்தன. இன்டர் மிலன் அணியோ மொத்தமாக அடித்த 8 ஷாட்டுகளில் 2 மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் க்விச்சா க்வாரட்ஸ்கெலியா,சென்னி மயுலு முறையே 73, 86ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள்.

விவசாயிகளின் கிளப் எனக் கிண்டல் செய்யப்பட்ட பிஎஸ்ஜி அணி முதல்முறையாக சாம்பியன் லீக்கை வென்றுள்ளது.

அதிலும் சாதாரண வெற்றி கிடையாது. 5-0 என்ற வரலாற்று வெற்றியுடன் கோப்பையை கைப்பற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களைக் கவரும் சின்ன மருமகள் தொடர்!

சின்ன மருமகள் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சின்ன மருமகள்". மக்களிடம் ... மேலும் பார்க்க

கமல் - மணிரத்னம் கூட்டணி வெல்லுமா? தக் லைஃப் செய்திகள் நேரலை...

சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில... மேலும் பார்க்க

தக் லைஃப்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்ட... மேலும் பார்க்க

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் ... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்

ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் ... மேலும் பார்க்க

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து... மேலும் பார்க்க