கமல் - மணிரத்னம் கூட்டணி வெல்லுமா? தக் லைஃப் செய்திகள் நேரலை...
சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது.
வயதான கூட்டணி வெல்லுமா?
38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள மணிரத்னம் - கமல் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் நாளை (ஜூன்.5) வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.