8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது இளைஞர் கைது!
சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது.
ராபின்சனின் அறை நண்பரான (ரூம் மேட்) லான்ஸ் ட்விக்ஸ் என்பவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மூலமாத்தான் அவர் பிடிப்பட்டது கவனிக்கத்தக்கது.
ராபின்சன் ரூம் மேட்யார்?
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராபின்சன் அறை நண்பரும் கேம் விளையாடுவதில் வல்லவராக இருக்கும் லான்ஸ் ட்விக்ஸ் (22 வயது) இந்த வழக்கில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
ராபின்சன் அறைநண்பர்களில் ஒருவர் திருநங்கையாக மாறிவருவதாகவும் அவருடன் ராபின்சன் வாழ்ந்துவருவதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர் செய்த கொலையா?
அந்த நபர் யார் என்ற அடையாளத்தை வெளியிடவில்லை. ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ராபின்சன் குறுஞ்செய்தி அனுப்பியவர் லான்ஸ் ட்விக்ஸ்தான் அந்த நபரா என்ற கோணத்தில் விசாரணையில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
கொலைச்செய்யப்பட்ட சார்லி கிர்க் பெண்கள் மட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
பாலியல், பாலினம் ரீதியிலான முற்போக்கு என்பது ’பாலியல் அராஜகம்’ என்று சார்லி கிர்க் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.