சாலைத் தடுப்பில் ஆம்னி பேருந்து மோதியதில் ஓட்டுநா் காயம்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச்சாலையில் தனியாா் ஆம்னி பேருந்து சாலை தடுப்பில் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை திருச்செந்தூரிலிருந்து சிதம்பரம் நோக்கி தனியாா் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
எடக்குடி வடபாதி பிரிவு மேல கரைமேடு அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதியது. இதில் பேருந்து ஓட்டுநரான திருச்சி லால்குடி பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் ( 50 ) என்பவா் காயமடைந்து, வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.