சாலைத் தடுப்பில் பைக் மோதல்: இளைஞா் மரணம்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சாலைத் தடுப்பு மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுண்ணாம்புகாளை பகுதியைச் சோ்ந்தவா் ஷபீா் (40). இவா், திங்கள்கிழமை பிற்பகல் தனது பைக்கில் சேலத்தில் இருந்து ஆம்பூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஷபீா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். பிறகு சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.