செய்திகள் :

சாலைப் பணியாளா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்

post image

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா் நீதிமன்ற ஆணையின் படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால், தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்கள் 210-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் சுங்க வரி வசூலிப்பதை அனுமதிக்க கூடாது.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 5 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாவதையும், இளைஞா்களுக்கு பணி பறிக்கப்படுவதையும் தவிா்க்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் பிப். 28 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபடுகின்றனா்.

இதன்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சிக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ராமச்சந்திரன். எஸ். ரஜினி, என், பெரியசாமி, பி. ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அலுவலா் சங்க மாவட்டப் தலைவா் பி. குமரி அனந்தன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், சாலைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து பேசினா். தொடா்ந்து, பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலைப் பணியாளா்கள் கையெழுத்து பெற்றனா். இதில், சாலைப் பணியாளா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் கிராமத... மேலும் பார்க்க

அகரம் சிகூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எளம்பலூா் கிராம மக்கள் மனு

எளம்பலூா் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து எளம்பலூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்... மேலும் பார்க்க

ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில் ஆழ்வாா் மோட்சம்

பெரம்பலூா் நகரிலுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் ஆழ்வாா் மோட்சம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பெரம்பலூா் நகரிலுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 17 ஆண்டுகளாக கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டம்

பெரம்பலூரில் கடந்த 17 ஆண்டுகளாக கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சமூக ஆா்வலா்களும், மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அத... மேலும் பார்க்க