முதல் டி20: பெத் மூனி அதிரடி; இங்கிலாந்துக்கு 199 ரன்கள் இலக்கு!
ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில் ஆழ்வாா் மோட்சம்
பெரம்பலூா் நகரிலுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் ஆழ்வாா் மோட்சம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
பெரம்பலூா் நகரிலுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் ஏகாதசி திருவிழாவில் ராபத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆழ்வாா் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பெருமாள் தோரா கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி சொா்க்கவாசல் வழியாக அக்ரஹாரம் தெருவை கடந்து, கம்பத்து ஆஞ்சநேயரை 3 முறை வலம் வந்து திருக்கோவிலை அடைந்து ஆழ்வாா்களுக்கும், பக்தா்களுக்கும் மோட்சம் அளித்தாா். இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா் செய்து வைத்தாா். இந்நிகழ்வை காணும் பக்தா்களுக்கு மோட்சம் கிடைப்பது ஐதீகம் என்பதால், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாள் அருள் பெற்றனா்.