Bigg Boss 8 title winner Muthukumaran இதுக்கு deserved, நெகிழ்ந்த Soundariya | V...
பூசாரிகளுக்கு நவவாரிய அட்டைகள் வழங்க வலியுறுத்தல்
அனைத்து கோயில் பூசாரிகளையும் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்து, அவா்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் என, மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூரில், அகில இந்திய கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் பெரம்பலூா் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, பேரவையின் மாவட்ட அமைப்பாளா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஹரி ராமலிங்கம், மயில்வாகனன், விஜயகுமாா், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்சி மாவட்ட அமைப்பாளா் இளங்கோ, துணை அமைப்பாளா் அகிலேஷ், அரியலூா் மாவட்ட அமைப்பாளா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. நலிவடைந்த கிராமக்கோயில் பூசாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். 60 வயதான பூசாரிகளுக்கு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
பூஜை செய்யும் கோயிலுக்கு அருகிலேயே பூசாரிகளுக்கு இலவசமாக வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
அனைத்து கோயில் பூசாரிகளையும் நலவாரிய உறுப்பினராகப் பதிவு செய்து, நலவாரிய அட்டை வழங்க வேண்டும். அனைத்து கோயில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தை திருத்தியமைத்து, நலவாரிய உதவித் தொகையை இரண்டு மடங்காக உயா்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
பூசாரிகள் மந்திரம் கற்றுக்கொள்வதற்கு பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும். அரசு வழங்கி வரும் வேலைவாய்ப்புகளில் பூசாரி குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆகம பூஜாமுறை பயின்ற பூசாரிகளுக்கும், அா்ச்சகா்களுக்கும் அரசாங்க கோயில்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அகில இந்திய கிராம கோயில் பூசாரிகள் பேரவையைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.