சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் விளையாட்டுத் திடல் அமைக்க வலியுறுத்தல்
லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற மாநிலச் செயலா்கள் ஷபீக் அஹம்மது, ஹசான் பைஜி ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், கை. களத்தூரில் அண்மையில் கொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சோ்ந்த மணிகண்டன் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொலைக்கு காரணமானவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டம், வழியாக ரயில் வழித்தடம் அமைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் விளையாட்டு திடல் அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் தோ்தலில் மாவட்டத் தலைவராக முகமது ரஃபீக், மாவட்ட துணைத் தலைவராக மு. முஹம்மது பாரூக், மாவட்ட பொதுச் செயலா்களாக சையது அபுதாஹிா், அப்துல் கனி, மாவட்டச் செயலா்களாக அபுபக்கா் சித்தீக், அஸ்கா் அலி. மாவட்ட பொருளாளராக முகையதீன் பாரூக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.