செய்திகள் :

மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த விநாயகன்! நடிக்க தடை விதிக்கப்படுமா?

post image

மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையாகியுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகன் சில மாதங்களுக்கு முன் அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: சந்தானம் பிறந்த நாள்: டிடி நெக்ஸ்ட் லெவல் போஸ்டர் வெளியீடு!

பின், கோவாவில் தேநீர் கடைக்கு முன் குடித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கடுமையாக வசைபாடினார். அந்த விடியோ இணையத்தில் வெளியாகி விநாயகன் மீதான மதிப்பைக் கெடுத்தது.

இந்த நிலையில், மதுபோதையில் தன் வீட்டிலிருந்தபடி சாலையில் செல்வோரை விநாயகன் தகாத வார்த்தையால் தாக்கியுள்ளார். இதனை, எதிர் வீட்டிலிருந்தவர் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, மீண்டும் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், விநாயகனை இப்படியே விடக்கூடாது, மலையாள சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீத்து ஜோசப் - ஆசிப் அலி கூட்டணியில் புதிய படம்!

பிரபல மலையாள் இயக்குநர் ஜீத்து ஜோசப் படத்தில் ஆசிப் அலி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடரின் நாயகன் சந்தோஷ், தனது நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து கவனம் பெற்றார... மேலும் பார்க்க

கல்கி 2898 ஏடி - 2 படப்பிடிப்பு எப்போது?

கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் திரை... மேலும் பார்க்க

காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு எதிர்ப்பு?

காந்தாரா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 180... மேலும் பார்க்க

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!

சத்ரபதி சம்பாஜி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’சவ்வா’ படத்தில் சம்பாஜியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயி... மேலும் பார்க்க

தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படப்பிடிப்பு!

தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கன... மேலும் பார்க்க