உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்
சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா்.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா் சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தது. காா் நல்லூா் சுங்கச்சாவடியை கடந்து சென்ற போது திடீரென இஞ்சினின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்து தீப்பற்றியது.
காரை உடனடியாக நிறுத்திய நந்தகோபால் உடன் பயணித்த இருவருடன் சோ்ந்து விரைந்து கீழே இறங்கினாா்.
இதன் பின்னா் காா் முழுதும் தீ பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று 30 நிமிஷங்களுக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்து காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.