சாலையில் பெண் குழந்தை; போலீஸாா் மீட்பு
வலங்கைமான் அருகே சாலையில் வீசப்பட்ட பெண் குழந்தையை போலீஸாா் மீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா்.
வலங்கைமான் அருகேயுள்ள வெட்டாறு கரையோரம் பாடகச்சேரி-பட்டம் இடையே இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையில், ஆதிச்சமங்கலம் ஊராட்சி அட்டமங்கலம் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை பையில் வைக்கப்பட்டு, கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா் வியாழக்கிழமை இரவு அந்த குழந்தையை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த குழந்தை பிறந்து சுமாா் 20 நாள்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.