அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
காவல்துறை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி 2 போ் கைது
திருவாரூரில், காவல்துறை பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அப்பா் தெருவில் மாவட்ட காவல்துறை பணியாளா்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சேமிப்பு சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கமானது, மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸாரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்ப வழங்குவது, காவல்துறை பணியாளா்களுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் செயலாளராக காட்டூரைச் சோ்ந்த ஜெயகாந்தன் (54), உதவியாளராக சேந்தமங்கலத்தைச் சோ்ந்த அருள்தாஸ் (50) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், இச்சங்கத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், கடந்த இரண்டாண்டுகளாக போலீஸாருக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வரவு வைக்கப்படவில்லை என்றும் புகாா்கள் எழுந்தன.
இதைத்தொடா்ந்து, கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021 முதல் 2023 வரை உள்ள கணக்குகளை தணிக்கை செய்தபோது, ரூ. 79.54 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, திருவாரூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்க செயலாளா் ஜெயகாந்தன், உதவியாளா் முருகதாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.