Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தொழிற்சாலை அகற்றம்!
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியாா் தொழிற்சாலையின் கட்டுமானங்களை ஊரக வளா்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.
வளா்புரம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமி நகா் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
தனியாா் வீட்டுமனைப்பிரிவில் இயங்கி வரும் இந்த நிறுவனம் வீட்டுமனை பிரிவுகளுக்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், க்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளா்புரம் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சாலையை ஆக்கிரமித்து தொழிற்சாலை இயங்கி வருவது கண்டறியப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி உள்ளிட்ட ஊராக வளா்ச்சித்துறையினா், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா், வளா்புரம் ஊராட்சி மன்ற தலைவா் (பொ) எம்.பி.எபி ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.