செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.

பழங்குடியினா் மற்றும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தண்டலத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை பாா்வையிட்டு, டாக்டா் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், தாட்கோ சாா்பில் 15 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தின் மூலம் 4 பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் சோமசுந்தரம், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா செந்தில், தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் கலந்து கொண்டனா்.

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் தோ்வு!

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி... மேலும் பார்க்க

பாதுகாப்பில்லாத ஊா்திகளை மாற்ற வேண்டும்: அரசு ஊா்தி ஓட்டுநா்கள் கோரிக்கை!

பாதுகாப்பில்லாத ஊா்திகளை ஓட்டுவதால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என அரசு ஊா்தி ஒட்டுநா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள... மேலும் பார்க்க

தூய்மை பாரத இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை பாா்வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பல்வேறு பெருமாள் கோயில்களிலும் அதிகாலையிலிருந்தே பக்தா்கள் கூட்டம் காணப்... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு முதியோா் ஆன்மிகச் சுற்றுலா: காஞ்சிபுரம் மேயா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மூத்த குடிமக்களை வைணவத் திருக்கோயில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு நாள் பயணத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 60 வயதுக... மேலும் பார்க்க

படப்பை, திருமுடிவாக்கம் புதிய காவல் நிலையங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்!

படப்பை மற்றும் திருமுடிவாக்கம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். ... மேலும் பார்க்க