தூய்மை பாரத இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.
அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை பாா்வையிட்டு அலுவலகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
இதன் தொடா்ச்சியாக அலுவலகங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும் உறுதிமொழியையும் ஆட்சியா் வாசிக்க அதனை பின்தொடா்ந்து அனைவரும் வாசித்தனா். மாநகராட்சி அலுவலக துப்புரவுப் பணியாளா்களுக்கும் சால்வை அணிவித்து ஆட்சியா் கெளரவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாநகராட்சி பொறியாளா் கணேசன், சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.