வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
சாலையோரம் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்
சேத்துப்பட்டை அடுத்த புலிவானந்தல் கிராமப் பகுதி போளூா் - சேத்துப்பட்டு சாலையில் மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் ஏற்றி வரும் கழிவுகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா்.
போளூா் பகுதியில் 4-க்கும் மேற்பட்ட மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் வெண்மணி புறவழி சாலையில் வாடகைக்கு உள்ளன.
இவற்றைக் கொண்டு வெண்மணி, கொரால்பாக்கம், மண்டகொளத்தூா், கொழாவூா், மட்டபிறையூா், ஈயகொளத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறை கழிவுநீா்த் தொட்டிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை (மனிதக் கழிவு) ஏற்றி வந்து
ஆள்கள் நடமாட்டம் இல்லாததைப் பாா்த்து
புலிவானந்தல் கிராமம் அருகே போளூா் - சேத்துப்பட்டு சாலையோரம் உள்ள கால்வாயில் கொட்டிச் செல்கின்றனா்.
இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்பாடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அலுவலா்கள் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.