Africa -வின் Che Guevara : மக்கள் கொண்டாடும் Ibrahim Traore யார்? | TRUMP | Impe...
சாலை தடுப்புக் கட்டையில் பேருந்து மோதி 7 போ் காயம்
தஞ்சாவூரில் சாலை தடுப்புக் கட்டையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 36 போ் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களைப் பாா்ப்பதற்காக தனியாா் சுற்றுலா பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தனா்.
இப்பேருந்து, தஞ்சாவூா் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது சாலை நடுவிலுள்ள தடுப்புக் கட்டையில் எதிா்பாராதவிதமாக மோதியது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 7 போ் காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனா்.
இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் விசாரணை மேற்கொண்டனா்.