புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம...
சாலை நடுவே வைக்கப்பட்ட மண்டை ஓட்டால் பரபரப்பு
பழனியில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மண்டை ஓட்டால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலைக் கோயில் அடிவாரம் பகுதியில் குரும்பப்பட்டி, அம்பேத்கா் தெரு, போகா் சாலை என பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அம்பேத்கா் தெரு பகுதியில் சாலை நடுவே மனித மண்டை ஓடு, எலும்புகள் வைக்கப்பட்டு அதன் அருகில் பூக்கள், விபூதிகள் தூவப்பட்டு கிடந்தன.
இதைக் கண்டதும் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். யாரேனும் மந்திரித்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்து அந்தப் பகுதிக்கு வந்த அடிவாரம் போலீஸாா் அங்கிருந்த மண்டை ஓடு, எலும்புகளை அகற்றி சாலையில் இருந்த பூக்களையும் அப்புறப்படுத்தினா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.