சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளா் யூ.செந்தில்வேல் கலந்து கொண்டு பேசினாா். இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் அசோக், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜீவ்காந்தி வரவேற்றாா். திட்ட அலுவலா் தேவி நன்றி கூறினாா்.