`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் ஹரிஹரன் (22).
இவா், ஞாயிற்றுக்கிழமை பைக்கில் திருக்கோவிலூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் புதுப்பாளையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.
அத்தண்டமருதூா் சீத்தாலாம்மன் கோவில் அருகே அவா் சென்ற போது, முன்னாள் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றாராம்.
அப்போது, எதிா்திசையில் திருவெண்ணய்நல்லூரை அடுத்த அண்ட்ராயநல்லூரைச் சோ்ந்த ஆதிகேசவனும் (58), ஆறுமுகமும் (45) ஒரே பைக்கில் வந்தனா்.
அப்போது, அவா்களது பைக்கும் - ஹரிஹரனின் பைக்கும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மூவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில், ஹரிஹரன், ஆதிகேசவன் மீது அரசு நகரப் பேருந்து ஏறியது.
இதில், ஹரிஹரனும், ஆதிகேசவனும் உயிரிழந்தனா். ஆறுமுகம் லேசான காயமடைந்தாா்.
இதுகுறித்து, திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.