22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
சாஸ்த்ரா சாா்பில் 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அளிப்பு
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 25-ஆம் ஆண்டாக 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் சாா்பில் வல்லம் அருகேயுள்ள திருமலைசமுத்திரம், வல்லம்புதூா், நாட்டாணி, மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, கும்பகோணம் அருகே கொட்டையூா், நெம்மேலி, கட்சிக்கட்டு, மயிலாடுதுறை அருகேயுள்ள சேமங்கலம், திருச்சி மாவட்டம் தேவராயனேரி நரிக்குறவா் காலனி ஆகிய 10 கிராமங்களில் ஏறத்தாழ 6 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் ஜனவரி 9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. இந்த பொங்கல் தொகுப்பு பைகளின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம்.
ஒவ்வொரு பையிலும் பச்சை அரிசி 5 கிலோ, வெல்லம் 1 கிலோ, பருப்பு 1 கிலோ, மஞ்சள் ஆகியவை அடங்கி இருந்தன. பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதனுடன் இணைந்து ‘சாஸ்த்ரா’ பணியாளா்கள் இணைந்து பொங்கல் தொகுப்பு பைகளை வழங்கினா்.