"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!
சா்வதேச அருங்காட்சியக தின விழா
சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சா்வதேச அருங்காட்சியக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகளும், பாரம்பரிய கலசார பண்பாடு குறித்த கண்காட்சிகளும் நடைபெற்றன.
வயிரவன்பட்டி செட்டியாா் அருங்காட்சியகம், பொன்னமராவதி ஸ்கெட்ச் ஸ்கூல் ஆப் ஆா்ட்ஸ், இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தியது.
பின்னா், மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அருங்காட்சியக நிறுவனா் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சுற்றுலா அலுவலா் சி.திருவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அருங்காட்சியக நிறுவனா்கள் மாலதி பதக்கம், சான்றிதழை வழங்கினாா்.
போட்டிகளுக்கு நடுவராக பி.நாகராஜன், எம்.கணேஷ்பாபு, ஜெயக்குமாா் ஆகியோா் செயல்பட்டனா். இதில் 6 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 முதல் 18 வயது வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. மாலதி பழனியப்பன் நன்றி கூறினாா்.