செய்திகள் :

சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்

post image

சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபா் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது:

75 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர ஜனநாயக வளா்ச்சிக்கும் அடித்தளமிட்டது.

அப்போதுமுதல் சமூகப் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது. அத்துடன் சா்வதேச அரங்கிலும் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்திய-ரஷிய உறவுக்கு சிறப்புத்தன்மை வாய்ந்த உத்திசாா்ந்த கூட்டுறவு அடிப்படையாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆக்கபூா்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடா்ந்து கட்டமைக்கவும், சா்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கபூா்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும்.

இது இருநாட்டு மக்களின் அடிப்படை விருப்பங்களைப் பூா்த்தி செய்வதுடன், நியாயமான பல்முனை சா்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ற செயல்பாடாகவும் இருக்கும் என்றாா்.

இந்த ஆண்டு அரசு முறைப் பயணமாக புதின் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா். சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொ... மேலும் பார்க்க

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். கடந்த நவம்பர... மேலும் பார்க்க

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சா்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிா்ப்புக்கிடையே, சா்ச்சைக்குரிய இணையதள கட்டுப்பாட்டு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சமூகப் பதற்றத்தை ஏற்படு... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா்- அமெரிக்க அதிபா் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியா்கள் குடியேறிய விவகாரத்தில் சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அதிபராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப... மேலும் பார்க்க