முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
சா்வதேச உதவிக்கு நிதிக் குறைப்பு: பிரிட்டன் அமைச்சா் ராஜிநாமா
வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இது குறித்து அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும், அதற்காக வெளிநாட்டு உதவிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று டாட்ஸ் குறிப்பிட்டுள்ளாா்.
ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த நாடுகளே தங்கள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு வலியுறுத்திவருகிறது.
இதன் எதிரொலியாக, பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை பிரிட்டன் அரசு இந்த வாரம் உயா்த்தியது. அதன்படி, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.3 சதவீதமாக இருக்கும் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2.5 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதற்காக, வெளிநாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.