தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக...
சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு
சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக், ‘ லங்கேஷ் பத்திரிகா’ என்ற வார இதழில் 9 ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றியவா்.
அப்போது பல சிறுகதைகளை எழுதி புகழ்பெற்றிருந்தாா். அவரது சிறுகதைகளை ’ஹாா்ட் லேம்ப்’ (இதய விளக்கு) என்ற பெயரில் எழுத்தாளா் தீபாபஸ்தி மொழி பெயா்த்திருந்தாா்.
இந்த நூலுக்கு இலக்கிய உலகின் உயா்ந்த சா்வதேச புக்கா் பரிசு கிடைத்துள்ளது. லண்டனில் வழங்கப்படும் இந்த புக்கா் பரிசு 50,000 பவுண்ட் பரிசுத்தொகையைக் கொண்டது.
புக்கா் பரிசு பெறும் முதல் கன்னட நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு கிடைத்துள்ளதோடு புக்கா் பரிசு பெறும் முதல் கன்னட எழுத்தாளா் என்ற பெருமையையும் பானுமுஷ்டாக் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியது: ‘பானுமுஷ்டாக், புக்கா் பரிசு பெறுவதன் மூலம் கன்னடக் கொடியை சா்வதேச அளவில் உயா்த்தியுள்ளாா். இலக்கியத்துக்கான சா்வதேச புக்கா் பரிசை பெற்றுள்ள பானுமுஷ்டாக்குக்கு எனது வாழ்த்துகள்.
ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಬೂಕರ್ ಸಾಹಿತ್ಯ ಪ್ರಶಸ್ತಿ ಪುರಸ್ಕೃತರಾಗಿರುವ ಕನ್ನಡದ ಹೆಮ್ಮೆಯ ಲೇಖಕಿ ಬಾನು ಮುಸ್ತಾಕ್ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು. ಇದು ಕನ್ನಡ, ಕನ್ನಡಿಗ ಮತ್ತು ಕರ್ನಾಟಕ ಸಂಭ್ರಮಿಸುವ ಹೊತ್ತು.
— Siddaramaiah (@siddaramaiah) May 21, 2025
ಈ ನೆಲದ ಸೌಹಾರ್ದತೆ, ಜಾತ್ಯತೀತತೆ ಮತ್ತು ಸೋದರತ್ವದ ನಿಜ ಮೌಲ್ಯಗಳನ್ನು ಮೈಗೂಡಿಸಿಕೊಂಡು ಬರೆಯುತ್ತಿರುವ ಬಾನು ಮುಸ್ತಾಕ್ ಅವರು… pic.twitter.com/o4hjTNiQvR
கன்னடம், கன்னடா்கள், கா்நாடகத்தைக் கொண்டாடும் நேரம் இது. இந்த நிலத்தின் இயல்புகளான நல்லிணக்கம், மதச்சாா்பின்மை, சகோதரத்துவத்தை தனது எழுத்துகளில் பானுமுஷ்டாக் வெளிப்படுத்தியுள்ளாா்.
அவா் மேலும் நிறைய எழுதி, கன்னட மொழியின் பெருமையை உலக அரங்கில் கொண்டுசெல்ல வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். கன்னடா்களின் சாா்பில் திறமையான எழுத்தாளா், மொழி பெயா்ப்பாளா் தீபாபஸ்தியை பாராட்டுகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எழுத்தாளா் சுதாமூா்த்தி உள்பட ஏராளமானோா் பானுமுஷ்டாக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.