விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்
திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை முன்னாள் பொருளாளா் என். சண்முகம் ஏற்றினாா்.
நிகழ்வில் சிஐடியு சங்கத்தின் மாநிலத் தலைவா் அ. சௌந்தரராசன் சிறப்புரையாற்றி பேசியது:
தொழிற்சங்கங்களை ஒழிக்கும் வகையில் தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளா்களுக்குப் பதிலாக ஒப்பந்த தொழிலாளா்களை பணியமா்த்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது தொழிலாளிகளுக்கு எதிரான கடும் தாக்குதலாகும். பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அவா்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) துண்டுப் பிரசுரம் விநியோகித்து காா்ப்பரேட்மயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். தனியாா்மயத்தை எதிா்ப்பதை நாம் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.
முன்னதாக நடைபெற்ற செஞ்சட்டை பேரணியை சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தொடங்கிவைத்தாா். சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியப் பேரணி டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் சென்று மாநாட்டுத் திடலை அடைந்தது. மாநாட்டில் சிஐடியு நிா்வாகிகள் பி. கோதண்டபாணி, சுகுமாறன், சி.செந்தில்குமாா், எம். கண்ணன், பி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.