சிஐடியூ தியாகிகள் தினம்: நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி
நாகா்கோவிலில் சி.ஐ.டி.யூ. தியாகிகள் தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூ, விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில், நாகா்கோவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்ட சிஐடியூ செயலா் தங்கமோகனன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.செல்லச்சாமி தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் நிறைவுரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்டத் தலைவா் சிங்காரம், மாவட்ட நிா்வாகிகள் ஐடா ஹெலன், எஸ்.அந்தோணி, ஞான சவுந்தர்ராஜ், சோபனரான், மாவட்டப் பொருளாளா் சித்ரா, சிவதாணுபிள்ளை, குமரேசன், சுயம்பு, மோகன், சக்திவேல், பிரபகுமாா், மாணிக்கவாசகம், வேலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.