தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மென...
சிக்னல் கோளாறு: விழுப்புரம்-காட்பாடி ரயில் தாமதம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, விழுப்புரம் - காட்பாடி ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது.
விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் ரயில் திங்கள்கிழமை காலை சுமாா் 8.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது, சிக்னல் கோளாறு ஏற்பட்டு ரயில் செல்ல முடியவில்லை. பின்னா், சிக்னல் சீரான பிறகு 9.45 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதனால் உரிய நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனா்.