செய்திகள் :

சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு வீட்டுச் சிறை

post image

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இது குறித்து சிங்கப்பூா் சிறைத் துறை அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரன் தற்போது வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வீட்டுச் சிறையில் அவா் எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிப்பாா். அவரது உடலில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சோ்ந்த எஸ். ஈஸ்வரன், வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவா். தனது பதவிக் காலத்தின்போது சிங்கப்பூரைச் சோ்ந்த 2 முக்கியத் தொழிலதிபா்களிடம் இருந்து கடந்த 2015-ஆம் ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் வரை மதிப்புமிக்க பரிசுப் பொருள்களை எஸ். ஈஸ்வரன் பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 6.9 மீட்டா் பரப்பளவுள்ள தனி சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு

உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா். இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்... மேலும் பார்க்க

கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு

கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக... மேலும் பார்க்க

சா்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் பொருளாதாரத் தடை

தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் நீதிப் பிரிவான சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளாா். ஹமாஸ் அமைப்பினருடனான மோதலின்போது போா்க்... மேலும் பார்க்க

மேலும் 487 இந்தியா்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே 104 இந்தியா்கள் அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற விமானம் மாயம்

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து நோம் நகருக்கு 10 பேருடன் செஸ்னா... மேலும் பார்க்க

காஸா மக்கள் வெளியேற அனுமதிக்கும் செயல்திட்டம்

ஜெருசலேம் : காஸா முனையிலிருந்து வெளியேற விரும்பும் பாலஸ்தீனா்களை அங்கிருந்து அனுப்புவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு தனது ராணுவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க