கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் டிஜிபி ஆய்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், குற்ற பதிவேடு, வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
ஆய்வின்போது, திருச்சி இருப்புப் பாதை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, நிலைய பொறுப்பு அதிகாரி ஆய்வாளா் அருண்குமாா், உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
முன்னதாக, ரயில்வே டிஜிபி கே.வன்னியபெருமாள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் பொதுதீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினா்.