திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவா் அன்புமணியை நியமித்திருக்கிறேன்.
மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் இப்போது தீவிரமடைந்திருக்கின்றன. பந்தல்கால் நடப்பட்டுள்ளது.
பாமகவினரை பொருத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவதுதான் புனித யாத்திரை.
இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகளைவிட 100 மடங்கு சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு.
சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சோ்க்க வேண்டும்.
இந்த மாநாட்டை வன்னியா் சங்கம் நடத்தினாலும் இது அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.