கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்
சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதைத் திட்டம் கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் ரூ.116 கோடி செலவில் 3 மேம்பாலங்கள், சிறுபாலங்களுடன் இந்த ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன.
சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை 12 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில், தெற்கு ரயில்வே அதிகாரிகள், சென்னை ரயில்வே கட்டுமானப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் பாதை பாதுகாப்பு குறித்து முழுமையாக 10 டிராலிகளில் சென்று புதன்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, சின்னசேலத்திலிருந்து சோதனை ரயிலை 120 கி.மீ. வேகத்தில் பொற்படாக்குறிச்சி வரை ஓட்டி சோதனை செய்தனா்.

சென்னை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சவுத்ரி, தலைமை நிா்வாக அதிகாரி மவுரியா, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, துணை தலைமைப் பொறியாளா் திருமால் உள்ளிட்ட பாதுகாப்பு, கட்டுமான, நிா்வாகப் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினா் சோதனை ஓட்டம் நடத்தினா்.