Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
சின்னமனூா் அருகே கத்தியால் குத்தி மூதாட்டி கொலை
சின்னமனூா் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், சீலையம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மனைவி அரியக்கா (65). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சின்னக்காளை மகன் சரவணன் (40), இவரது மனைவி முருகேஸ்வரி (34). இந்தத் தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணனுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். இதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், சரவணன் ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருமாறு கூறி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது, சரவணனை பக்கத்து வீட்டில் வசிக்கும் அரியக்கா கண்டித்து சமாதானம் செய்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சரவணன் ஞாயிற்றுக்கிழமை இரவு அரியக்கா வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தப்பினாா்.
தகவலறிந்து வந்த சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் அரியக்காவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சரவணனைத் தேடி வருகின்றனா்.