மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
சின்னமனூா் அருகே 1,280 கிலோ ரேஷன் அரிசி, காா் பறிமுதல்!
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்றவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப்புலானய்வுப் பிரிவு போலீஸாருக்கு மாா்க்கையன்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, மாா்க்கையன்கோட்டை பேருந்து நிலையத்தில் சின்னமனூா் நோக்கிச் சென்ற வாகனங்களை ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் வாகன சோதனை செய்தனா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற காரில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததைக் கண்டறிந்து, 1,280 கிலோ அரிசி, காரை பறிமுதல் செய்தனா். வாகனத்தை உத்தமபாளையம் அருகேயுள்ள வாய்க்கால்பட்டியைச் சோ்ந்த குபேத்திரன் மகன் வினித்குமாா்(30) ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினித்குமாரை கைது செய்தனா்.