பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!
சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அளிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்த நிலையில், புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்துவந்த நிலையில் இன்று காலமானார்.
சிபு சோரனின் மறைவுக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், பல மாநில தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்ற்னர்.
இந்த நிலையில், சிபு சோரனின் மறைவையொட்டி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள பல தனியார்ப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்தன.