சிம்பு 51: படப்பிடிப்பு தாமதம் ஏன்? இயக்குநர் விளக்கம்!
நடிகர் சிம்புவின் 51-ஆவது படம் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதற்கான காரணத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
அவர் பேசியதில் தாமதத்திற்குக் காரணம் சிம்பு எனப் பலரும் சமூக வலைதளங்களில் கூறுவதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
சிம்புவின் 51-ஆவது படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் கதையை எழுதி முடிக்கவில்லை என இயக்குநர் கூறியுள்ளார்.
சிம்பு தயார், நான் இல்லை...
தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அஸ்வத் மாரிமுத்துவிடம் இந்தப் படம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. இது குறித்து அவர் பேசியதாவது:
சமூக வலைதளங்களில் பேசுவதுபோல் இந்தப் படம் தாமதம் ஆவதற்கு காரணம் நான் மட்டுமே. சிம்பு சார் நாளைக்கே படப்பிடிப்பு என்றாலும் வருவதற்கு அவர் தயாராகவே இருக்கிறார்.
பழைய சிம்புவைப் பார்க்கலாம்
டிராகன் படத்துக்காக ஒன்றரை ஆண்டுகள் செலவழிந்தது. அதனால், குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறேன். இன்னும் நான் கதையை முழுமையாக எழுதி முடிக்காததால் மட்டுமே தாமதம் ஆகிறது.
உங்களுக்கு பிடித்தமான நடிகர் படத்தை நன்றாக எடுக்க வேண்டுமில்லையா? காதலும் குடும்பமும் கலந்தமாதிரி இந்தப் படம் இருக்கும். குறிப்பாக, மன்மதன், குத்து போன்ற படங்களில் இருந்த சிம்புவை மீண்டும் கொண்டுவருகிறோம்.
அடுத்தாண்டு வரும் ரிலீஸாகும். நிச்சயமாக படம் அனைவருக்கும் பிடித்தமாதிரி இருக்கும் என்றார்.